இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரோர் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இதில் மஹிபால் லோம்ரோர், பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்கியுள்ளார். முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரின் விக்கெட்டை வீழ்த்திய அவர், 13 ஓவர்கள் பந்துவீசி 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 48 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார்.
அதேபோல, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹர், கவுண்டி ஆடுகளங்களில் 6 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அபார சாதனை படைத்துள்ளார். இவரது இந்தச் சிறப்பான பந்துவீச்சு, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் இவரைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க வைத்துள்ளது.
✅ Six wickets. Showman Chahar gets his sixth wicket with a brilliant googly to finish with 6/80 from his 22 overs. 👏 🤎 | #CountyChampionship https://t.co/ajkz5BaUjD pic.twitter.com/nmPaeZWJcX — Surrey Cricket (@surreycricket) August 28, 2026 “>
✅ Six bows.
2019-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ராகுல் சாஹர், இதுவரை இந்தியாவுக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும், ஒரு ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இருப்பினும், 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தில் இருந்து விலகியிருந்த ராகுல் சாஹர், தற்போது கவுண்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளித் அசத்தியதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளார்.
