பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 995 ரயில் ஓட்டுநர்கள் மதுபோதை சோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியின் போது மதுபோதையில் இருந்த தகவல் RTI மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 471 ஓட்டுநர்களும், மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில் 104 ஓட்டுநர்களும் இந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளனர். இந்த தகவல் ரயில் பயணிகளை பீதியில் உறைய வைத்துள்ளது.