4808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடுக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இதன்பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த போது மருத்துவ துறையில் எம்.ஆர்.பி-யில் நிரப்பப்படும் அனைத்து பணிகளும் நிரந்தர பணிகள் எனவும் 4808 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சென்ற வாரம் 112 சித்தா மருத்துவர்கள் ஐந்து ஆயுர்வேதா மருத்துவர்கள் 13 ஓமியோபதி மருத்துவர்கள் என 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் 1021 மருத்துவர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.