ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை AWES வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் தேர்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் நெகட்டிவ் மார்க் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதள பக்கத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை அணுகவும்.