
தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி ஈரோடு, ராணிப்பேட்டை, குமரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1.2 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 4027 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. தோல் தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் இருக்கும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. குறிப்பாக 30 வயதுக்கு மேல் அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.