ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் வெப்பம் சற்றே தனிந்த நிலையில் சீமானின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவர் ஈழ மக்கள் கஷ்டத்தில் வாடகை வீட்டில் இருக்கும்போது 40 ஆயிரம் ரூபாய் டி-சர்ட், தங்க சங்கிலி அணிந்திருக்கும் எளிய தமிழ் பிள்ளை என சீமானின் புகைப்படத்துடன் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெற்றி குமரன் என்பவர் அந்த டி-சர்ட் லொயாலோ கல்லூரி எதிர்ப்புறம் உள்ள கடையில் 850 ரூபாய்க்கு கிடைப்பதாக ட்விட் செய்துள்ளார். எனினும் அடுத்தடுத்து காரசாரமான ட்விட்டுகளால் சீமானின் டி-சர்ட் சர்ச்சை சமூக வலைதளங்களில் சூடு பிடித்து வருகிறது.