திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான திருச்சி சூர்யா முதல்வர் ஸ்டாலினை ஜோக்கர் என விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் நிலையில் அது குறித்து திருச்சி சூர்யா வெளியிட்ட பதிவில், 40 வாங்கினாலும் நீங்கள் ஜோக்கர் தான், தனி பெரும்பான்மை இல்லை என்றாலும் நாங்கள் ராஜா தான் என சொல்லி முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை மோசமாக எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.