சினிமாவை பொறுத்த வரையில் 30 வயதை எட்டியதும் பல நடிகைகள் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் 40 வயதை அடைந்தும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளாக நீடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர்தான் நடிகை திரிஷா. விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என அடுத்தடுத்து தமிழிலும் தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் பிஸியாக இருக்கும் இவர் குறித்து அடுத்தடுத்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இவரது திருமணம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகிறது.

திரிஷா திருமணம் நிச்சயம் மட்டுமே ஒருமுறை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. இது குறித்து அண்மையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், இப்போது திரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டு எத்தனையோ நடிகர் நடிகைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதுவே சிலர் விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர். இதனால் திருமணம் செய்து கடைசியில் விவாகரத்து செய்துவிட்டு மன அழுத்தத்தில் இருப்பதற்கு பதிலாக திருமணம் செய்யாமலேயே இருக்கலாம் என்று திரிஷா முடிவு எடுத்து இருப்பதாக பயில்வான் புதிய தகவலை கூறியுள்ளார்.