
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போல 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் 200+தொகுதிகளை வென்று காட்ட வேண்டும் என்ற திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளின் அடிப்படையில் 221 சட்டமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்ததை அவர் சுட்டிக் காட்டிய நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல இப்போதிலிருந்து அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.