கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த பெண்ணிடம் திடீரென பணம் கேட்டனர். அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இதனால் கோபமடைந்த 4 பேரும் பணம் தரவில்லை என்றால் உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெண்ணை மிரட்டிய ரீச்சல், செலினா, ராஜகுமாரி, ஒரு ஆண் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.