உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதியில் சுனில் குமார் என்பவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு பூனம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். திடீரென சுனில் குமாரின் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தி சுனில் குமார் உள்பட நான்கு பேரையும் கொன்றனர்.

அந்த வீட்டில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுனில் குமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட பதிவில், இன்று அமேதி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்க முடியாதது. சுனில் குமாரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உத்தர பிரதேச அரசு துணையாக நிற்கும். இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.