குஜராத்தின் காந்தி நகரில் வசிக்கும் பாயல் என்ற பெண் ஒருவர், அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அகமதாபாத்தைச் சேர்ந்த பாவிக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதில் விருப்பமில்லாத பாயல், தனது கல்பேஷ் காதலனுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே பாவிக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பாவிக் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாவிக் மற்றும் பாயலின் பெற்றோர் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தனர். அப்போது பாவிக்கின் வண்டி சாலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாவிக் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து அவரது பின்னால் மோதியுள்ளனர். அதன் பின் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் பாயலிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாயல் பாவிக்கை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டதை ஒப்புக்கொண்டு உள்ளார். பாயல் அளித்த தகவலின் படி, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கல்பேஷ் மற்றும் 2 குற்றவாளிகளும் சேர்ந்து பாவிக்கை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.