சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப் அணியில் விளையாடி வரக்கூடிய கிறிஸ்டினோ ரொனால்டோ குடும்பத்துடன் ரியாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவரது கனவு இல்லம் முடிவடைந்து குடும்பத்தோடு போர்ச்சுகல் செல்லும்போது, போர்ச்சுக்கீசிய உணவுகளை சமைக்க தெரிந்த சமையல்காரர் இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் விரும்பியுள்ளார். எனினும் மாதம் ரூபாய்.4.52 லட்சம் சம்பளம் கொடுக்க முடிவு செய்தும் அவருக்கு சமையல்காரர் கிடைக்கவில்லையாம்.

கடந்த வருடம் நடந்த கால்பந்து உலகக் கோப்பையில் கிறிஸ்டினோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகீஸ் அணி இறுதிசுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. இதுவே ரொனால்டோ தனது கிளப்புக்காக விளையாடுவது கடைசியாக இருக்கும் என்பதால் அவர் உலகக் கோப்பையை கைப்பற்றாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ரொனால்டோ இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது