தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மகளிர் தின விழாவில் பேசுகையில், தமிழக அரசின் பட்ஜெட் நிதியில் பெரும் பகுதி ஊழல் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டான 4.39 லட்சம் கோடி ரூபாயில், சுமார் 30 சதவீத நிதி ‘ஸ்டாலின் சார் டாக்ஸ்’ என்ற பெயரில் முறைகேடாகச் செலவிடப்படுவதாக அவர் விமர்சித்தார். இதில் 20 சதவீதம் முதலமைச்சருக்கும், 10 சதவீதம் அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்படுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை இவ்வாறு தனிப்பட்ட முறையில் கையாடல் செய்யாமல் முழுமையாக மக்களுக்கே செலவு செய்தால் ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
"Government-ல காசு இல்லை என சொல்கிறீர்கள்.. எப்படி எல்லோர் கணக்கிலும் 5000 ரூபாய் போடுறீங்க?"- தவெக தலைவர் விஜய்#Vijay | #TVK | #TVKVijay | #TVKMeeting | #WomensDay | #WomensDay2026 pic.twitter.com/lW05bWXpFy
— PttvOnlinenews (@PttvNewsX) March 7, 2026
அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, தேர்தலின் போது விடியற்காலையில் மக்களின் வங்கித் கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படுவது எப்படி என்று விஜய் கேள்வி எழுப்பினார். நிதிப் பற்றாக்குறைக்குக் காரணம் அரசின் தவறான மேலாண்மையும், இந்த ‘ஸ்டாலின் சார் டாக்ஸ்’ முறையும்தான் என்று குறிப்பிட்ட அவர், இந்த ஊழலை ஒழித்தாலே தமிழகத்தின் வளர்ச்சி தானாக நடக்கும் என்று ஆவேசமாகப் பேசினார்.
