தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்தது பெரிய விஷயம் கிடையாது. பிரதமர் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மொழியில் கோஷங்கள் எழுப்பியபடி வாழ்த்து சொல்லியுள்ளார். அதுதான் பாஜக ஆட்சியின் மகிமை. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அது கூட சொல்லவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து வெகு தூரம் பாதயாத்திரையாக முருகனை வழிபட வருவார்கள் என்று அறிந்தும் தமிழக அரசு எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யவில்லை.

பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. அமைச்சர் காந்தி மீது சென்ற ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு விடுத்து இருந்தேன். ஆனால் அதற்கு பொய்யாக பதில் அறிக்கை விடுத்து விட்டு மீண்டும் அவர்களுடைய ஊழல் போக்கை பின்பற்றி வருகிறார்கள். கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு முதல்வர் சிறப்பாக அல்வா கொடுத்து வருகின்றார். சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு திருநெல்வேலி இருட்டுக்கடைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.