அமைச்சர் மரிய வில்சனுக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நிலவி வரும் மோதல்கள் குறித்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி, ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், இந்த விவகாரத்திற்கும் சொத்துச் சொத்துத் தகராறுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இந்த சட்டப் போராட்டம் மற்றும் பிரச்சனையின் உண்மையான பின்னணி குழந்தை தத்தெடுப்பு சம்பந்தப்பட்டது என்று அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதவர்கள், தற்போது தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி வருவதாக அவர் பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார்.

சகோதரர் மரிய குலோத்  வேண்டுமென்றே திட்டமிட்டு அமைச்சரின் அரசியல் நற்பெயரைக் குலைக்கும் வகையில் இந்த விவகாரம் திசைதிருப்பப்படுவதாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டப்பூர்வமான இந்த விவகாரத்திற்குப் பின்னால் வலுவான அரசியல் சக்திகள் இயங்குவதாகவும், உண்மை விரைவில் நீதிமன்றத்தின் மூலம் வெளிவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.