பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’ படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை மாளவிகா பழங்குடி பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

மணிக்கணக்கில் மேக்கப் போடும் தங்கலான் நடிகை

சமீபத்தில் இந்தப் படத்துக்காக அவருக்கு மேக்கப் போடும் புகைப்படங்களை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “தங்கலான் படத்தில் மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும் கேரக்டரில் நான் நடிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.