ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ள கோட்டான் சர்வதேச பள்ளியில் பயின்று வந்த 9 வயது சிறுமி திவ்யா, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி காலை பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

​இந்தச் சம்பவத்தில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், இதே குடும்பத்தைச் சேர்ந்த திவ்யாவின் அண்ணன் அபிஷேக், கடந்த செப்டம்பர் மாதம் இதேபோல வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நான்கு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளையும் ஒரே பாணியில் இழந்த அந்தப் பெற்றோரின் துயரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.