மும்பையின் குர்லா பகுதியில் வெறும் 10 ரூபாய் கொத்தமல்லி விவகாரத்திற்காக வாடிக்கையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்ரீனிவாஸ் காம்ப்ளே என்ற வியாபாரியிடம் கொத்தமல்லி வாங்கச் சென்ற வாடிக்கையாளர், ஒரு கட்டு 20 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

​ஆத்திரமடைந்த வியாபாரி ஸ்ரீனிவாஸ், தான் வைத்திருந்த கத்தியால் வாடிக்கையாளரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வி.பி. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வியாபாரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.