ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார். முதுகு வில் போல் வளைந்து இருந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் அவருடைய வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு நடந்து சென்று வேலை செய்து வருகிறார்.

வேலை செய்யும் கடைகளில் கிடைக்கும் அட்டைப்பட்டி, பழைய இரும்பு கழிவுப்பொருட்களை சேகரித்து பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார். இவருக்கு வரும் முதியோர் உதவி தொகையையும் அவருடைய மகன்களை வாங்கிக் கொள்கிறார்களாம். இருப்பினும் அந்த மூதாட்டி பணத்தை மகன்களிடம் கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.