
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வருமா என்ற மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தானே கிராமத்தில் தாய் ஒருவர் தனது நான்கு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.