இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தணடனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பாக 218 வழக்குகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம் குற்றப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதே காலகட்டத்தில் ராஜஸ்தானில் 39 பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் முறையே 32 மற்றும் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2017 மற்றும் 2021-க்கு இடையில் 28 மாநிலங்களில் 1,278 பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் அதிகபட்சமாக 218 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. அஸ்ஸாம் (191), மத்தியப் பிரதேசம் (166) மற்றும் மகாராஷ்டிரா (133) ஆகியவை தொடர்ந்து உள்ளன.