இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் உங்களுக்கு இலவச க்ரெடிட் கார்டு தருவதாக வரும் மெசேஜ்களில் இருக்கும் லிங்க்களை க்ளிக் செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

நாளுக்கு நாள் வங்கிகள் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்படியான லிங்க் அனுப்பி அதன்மூலம் உங்களது பாஸ்வேர்டை திருடும் மோசடி நடைபெற்று வருகிறது. இதற்காக எஸ்பிஐ வங்கி அனைத்து பயனர்களுக்கும் விழிப்புணர்வு மெசேஜ்களை அனுப்பி வருகிறது