மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே திமுக முன்னிலை பெற்றுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.