குருக்ராமைச் சேர்ந்த இமான்ஷு ஜங்ரா என்ற வாலிபர், பிரபல நகைச்சுவை கலைஞர் பிரணித் மோரேவின் ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில் கலந்து கொண்டபோது, ஒரு பெண்ணுக்கு ‘370 ரூபாய் கொடுத்து பிரியாணி’ வாங்கிக் கொடுத்ததாகவும், அதற்குப் பதிலாக அவரிடம் தவறான முறையில் ‘வசூல்’ செய்ய நினைத்ததாகவும் பெண்களை இழிவுபடுத்தி வக்கிரமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் காமெடி என்ற பெயரில் அவர் பேசிய இந்த ஆணாதிக்கப் பேச்சுக்கு எதிராக நெட்டிசன்கள் தங்களின் கண்டனக் கணைகளைத் தொடுத்த நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, அவர் பணிபுரிந்து வந்த ‘ஸ்டார்விக் டிசைன்’ என்ற நிறுவனம், பெண்களைத் தரம் தாழ்த்தும் இத்தகைய சிந்தனை கொண்ட ஒருவரை வேலைக்கு வைத்திருக்க முடியாது என்று கூறி அவரை உடனடியாக வேலையிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

“>

 

இந்நிலையில் பொழுதுபோக்கிற்காகச் சென்ற இடத்தில் வாய்க்கொழுப்பால் பேசிய ஒரு வார்த்தை, “தவறுகளுக்கு எப்போதும் கடுமையான விளைவுகள் உண்டு” என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வாலிபரின் வாழ்வாதாரத்தையே பறித்து நடுரோட்டில் நிறுத்தியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.