பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இவர்கள் அத்தனை பெரும் மொத்தம் 2 ஆசிரியர்கள் தானாம். இந்நிலையில் மீனா குமாரி என்ற ஆசிரியையை பர்சில் இருந்து 35 ரூபாய் காணாமல் போயுள்ளது. இதனால் மாணவர்கள் மேல் சந்தேகப்பட்ட அவர் 122 பேரையும் அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று சத்தியம் செய்யும் படி கூறியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கல்வி அதிகாரி உடனே விரைந்து வந்து விசாரணை நடத்தி அந்த ஆசிரியையை ட்ரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டுள்ளார்.