இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் அனைத்தும் இப்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். இதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் தற்போது விஜயின் லியோ படத்திற்கும் ஜவான் படத்திற்கும் அதிக சம்பளம் வாங்கி இசையமைத்திருந்தார் .

தற்போது 33 வயதாகும் அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். இவரிடம் பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஸ் போன்ற சொகுசு காரங்களும் இருக்கிறது .சினிமாவிற்கு வந்து சில வருடங்களில் தான் தன்னுடைய இசை திறமையால் மொத்தமாக 50 கோடி வரைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.