லியோ படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும்சில  நாட்கள் தான் இருக்கிறது. இத்தனை மாதங்களாக விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது தேதி நெருங்கிவிட்டது ஃப்ரீ புக்கிங் தற்போது  மும்முரமாக  நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். லோகேஷ் விஜய் காம்பினேஷன் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

யூடியூப்பில் எந்த சேனல்களை திறந்தாலும் லியோ பட குழுவினரின் பேட்டிகள் மட்டும்தான் வைரலாகி வருகிறது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏராளமான பேட்டி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் மடோனா செபாஸ்டேனின் கதாபாத்திரம் படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது .இதுவரை அவருடைய கதாபாத்திரம் குறித்து எந்த ஒரு தகவலும் படக்குழுவினர் வெளியிடவில்லை இதனால் படத்தில் மடோனாவின் கதாபாத்திரம் செம சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.