தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் போது விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் 04546-261093 LDMMILD 1077 660TM என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்