இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும் பெண் அரசு ஊழியர் ஒருவர் அவரது வருமானத்தை காட்டிலும் 332 மடங்கு அதிகளவிலான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது.

அரசு பொறியாளரான ஹேமா மீனா (36) வீட்டில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 77 கோடி மதிப்பிலான சொத்துகள், 230 லட்சம் மதிப்பிலான 98 இன்ச் டிவி, 7 சொகுசு கார் உட்பட 20 கார்கள், 100 நாய்கள் என இன்னும் ஏராளமான பொருட்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.