கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே நாளை காலை 7 மணி முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
