கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற வேன் செம்மகுப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முற்பட்டது.

அப்போது ரயில்வே தண்டவாளத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் வந்ததால் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிமலேஷ் (12), சாருமதி (16) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த விஸ்வேஸ் (16), செழியன் (15) மற்றும் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களில் செழியன் என்பவர் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து நடந்து இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் 3 ரயில்களின் சேவையில் நேர மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் மைசூர் – கடலூர் போட் எக்ஸ்பிரஸ் ரயில் புது சத்திரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், திருவாரூர்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும், மற்றும் தாம்பரம் – திருச்சி ரயில் சிதம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.