விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு 1750 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து குமார் அந்த லிங்கில் இருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி குமார் 15 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தவுடன் அவருக்கு 17, 600 திரும்ப கிடைத்தது. அதன் பின்னர் குமார் 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து குமார் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.