மேற்கு வங்காளத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மூன்று வாரங்களாகக் காணாமல் போன ஒரு பள்ளி மாணவியின் உடல், துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சாக்கு பையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த மாணவியைக் கடத்தி, கொலை செய்ததாக அவரது ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 22 அன்று, அந்த மாணவி டியூஷன் வகுப்பிலிருந்து வீடு திரும்பவில்லை என்று தெரியவந்தது. மாணவியின் குடும்பத்தினர் சிறுமியை தேடிய பிறகு, காணாமல் போனதாக புகார் அளித்தனர். விசாரணையில் ஆசிரியர் மீது சந்தேகம் எழ நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஆசிரியர் மாணவியைக் கடத்தி, கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு தனிமையான இடத்தில், நீர்நிலை அருகே சாக்கு பையில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவி ஏற்கனவே தனது தாயிடம், ஆசிரியர் தவறாக நடந்து, பலமுறை தவறாக தொட்டதாகப் புகார் கூறியிருந்தார். உடல் பரிசோதனை மூலம், கொலைக்கு முன் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்தக் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்
