மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு  விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த கார், 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிர் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி உள்ளவர்கள் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.