ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ம் தேதி முதல் அதிரடியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நீடிக்கும் இந்தத் தாக்குதல்களால் ஈரானின் முக்கியப் பகுதிகள் உருக்குலைந்துள்ளன. இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமும், போர்ச் சூழலும் உருவாகியுள்ளது.

​கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட இந்த கொரமான ஏவுகணை வீச்சில், இதுவரை 555-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் சோகமான விஷயமாக, சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் இந்தத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஒரு பெரிய அளவிலான உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.