டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்ட வந்த 14,000 ரூபாய் நிதி உதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6000 ரூபாயும் குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6000 ரூபாயும், குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் 2000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.