காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ விஜயதாரணி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யார் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. நெல்லையில் நாளை மறுநாள் பாஜக சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்த மூன்று பேரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மூவரும் இணையும் பட்சத்தில் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பாயும்.