தமிழ் சினிமாவில் அபூர்வராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயசுதா. அதன்பிறகு பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் அக்காவாக நடித்திருந்தார். செக்கச் சிவந்த வானம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் விஜய்க்கு அம்மாவாக வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே திருமணம் செய்து 2 முறை விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் அவர் மூன்றாவதாக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ரூல்ஸ் என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், தான் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் அந்த நபர், ஒரு இயக்குநர் என்றும், தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக தன்னுடன் தங்கி இருக்கிறார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.