
பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது விடுதியில் பெண்கள் கொடிகளில் போட்டிருந்த உள்ளாடைகளை அந்த வாலிபர் திருடியுள்ளார். இது போன்று பலமுறை நடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி உரிமையாளரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஷரத் உள்ளாடைகளை திருடியது தெரிய வந்தது. இதைதேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். மேலும் அதிகமாக ஆபாச படங்களை பார்ப்பதால் அவர் இது போன்று ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த வாரம் அந்த வாலிபர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் தைரியமாக புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.