உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், இனி 25 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கேஸ் பதிவு செய்ய முடியும் என சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவி வந்தது. இந்த வதந்தி பயனாளிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இதற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஏற்கெனவே அமலில் உள்ள நடைமுறைப்படியே, நகர்ப்புறங்களில் 25 நாள்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் 45 நாள்களுக்குப் பிறகும் புதிய கேஸ் சிலிண்டரைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சகம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது பரவி வரும் 35 நாள் என்ற தகவலோ அல்லது இதர கட்டுப்பாடுகளோ முற்றிலும் தவறானவை என்றும், பழைய முறையே தொடரும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, பயனாளிகள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
