உத்தரப்பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் தனது தனித்துவமான தோற்றத்தால் இணையத்தில் பிரபலமானவர் மோனாலிசா. இவர் தற்போது, தான் நடிக்கவிருந்த படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி படப்பிடிப்பின் போது இயக்குனர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

​இது குறித்துத் தனது பெற்றோரிடம் முறையிட்டபோது, அவர்கள் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளுமாறு கூறியதால், வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறி கேரளா வந்ததாக மோனாலிசா கூறியுள்ளார். மேலும், தனது காதலன் ஃபர்மான் கானைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, அதை ‘லவ் ஜிகாத்’ எனச் சித்தரித்துத் தவறான வதந்திகளைப் பரப்பியதும் இதே இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​இயக்குனர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள மோனாலிசாவின் இந்தத் தகவல் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. கும்பமேளா மூலம் பலரது கவனத்தை ஈர்த்த அந்தப் பெண், தற்போது தன் நீதிக்காகப் போராடுவது பெரும் விவாதமாகியுள்ளது.