சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் இங்கிலாந்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்க புதிய யுத்தியை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, 25 வயது, அதற்குட்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் வாங்கி கார் ஓட்டுகையில் முதல் 6 மாதம் – 1 வருடம் வரை தங்களது நண்பர்களை காரில் ஏற்றக்கூடாது. தடை உத்தரவை பிறப்பிக்க அந்நாடு முயன்றுள்ளதாக அமைச்சர் ரிச்சர்டு ஹோல்டன் கூறியுள்ளார். இதனால் விபத்துகள் குறையும் என தெரிகிறது.