பட்டினியால் இறந்து விட்டால் பரலோகம்  போகலாம் எனும் நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணியானது தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என நம்பப்பட்டு வருகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரையிலும் 47 நபர்களின் சடலங்களானது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரத்தில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகிலுள்ள காவல்துறையினர் ஷகாஹோலா காட்டிலிருந்து உடல்களை தோண்டி எடுக்கத் துவங்கினர். 3 நாட்களுக்கு முன்பு வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 26 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த 47 பேரும் பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்வார்கள் என கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் நம்புகின்றனர்.