வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடிமருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமா அல்லது பயங்கரவாத தாக்குதலாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பில் 12 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். குண்டு வெடித்ததில் காவல் நிலையம் தரைமட்டமானது. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என்று கூறிய போலீசார் மாகாணம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.