கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 7.3ரிக்டர் அளவீடு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நள்ளிரவில் இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளை தாக்கியுள்ளது. சுமந்த்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 84 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலமாக நில அதிர்வு வங்கதேசம் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.