நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மை என சொல்லாதீங்க என சொல்லுவாங்க. டேய் பைத்தியக்கார பயலே.. அரசியல் சாசனத்தில் இருக்குது. அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த  அரசியல் சாசனத்தில் இருக்குது. சரிடா…  நீயும் சிட்டிசன் ஆஃப் இந்தியா,  பாஸ்போர்ட்ல அப்படித்தான் இருக்கு. நானும் சிட்டிசன் ஆஃப் இந்தியா.

நீ என்னடா பெரிய புடுங்கி… நான் என்ன சின்ன புடுங்கி… நீ என்ன பெரும்பான்மை,  நான் என்ன சிறுபான்மை. உலகத்தின் மதத்தின் அடிப்படையில் மானுட குலத்தை கணக்கிட்டதே வரலாற்று செய்தி கிடையாது. உலகத்திலேயே கிடையாது. ஐரோப்பிய நாடுகள் முழுக்க கிறிஸ்தவன் தான். நார்வே, ஸ்வீடன்,  டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் எல்லாமே கிறிஸ்துவன் தான். பிறகு எதுக்குடா இத்தனை நாடு. மொழி வழியே… தேசிய இனங்கள்… நிலங்கள்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிகிறது என் அன்பு உடன் பிறந்தார்களே…. காரணம் மார்க்கம். ஓர் இறை.  நபிமொழி, அதுவே நம் வழி பிரிகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஏன் பிரிந்தது ? மொழி… நீ உருது… நான் வங்காளி. அங்கு எங்கடா இஸ்லாம் இருந்துச்சு. கிழக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய மக்கள் கொல்லப்படுகிறார்கள் உடன்பிறந்தார்களே… என் உயிர் சொந்தங்களே… கொல்லப்படுகிறார்கள்.

அப்படி கொல்லப்படுகிறபோது அன்னைக்கு மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தவன் சித்தார்த்த சங்கரய்யன் என்கின்ற காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர். நாட்டின் பிரதம அமைச்சர் அம்மையார் இந்திரா காந்தி. செத்து விழுபவன் இஸ்லாம் என்று கருதாது,  தன் இனம் சார்ந்தவன்,  என் தாய் மொழியை தாய்மொழியாக கொண்டவன் என்கின்ற கணக்கிலே சித்தார்த்த சங்கராயன் எழுந்து ஒரு முழக்கத்தை முன்வைத்தான். என் மக்களை ராணுவத்தை அனுப்பி நீ காப்பாற்றுகிறாயா ? இல்லை…

மேற்கு வங்கத்தில் இருந்து காவல்துறை படை அனுப்பி நான் காப்பாற்றவா ?  என்று…  அந்த முழக்கத்திற்கு பயந்து தான் அம்மையார் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பி, கிழக்கு பாகிஸ்தானை சண்டையிட்டு பிரித்து,  அவனுடைய தாய் மொழியிலேயே பங்களாதேஷ்…  எப்படி தாய் மொழியிலே தமிழ்நாடோ….  அப்படி பங்களாதேஷ் என்ற பெயர் வைத்த பிரித்தார்கள்.

இந்தியாவிலேயே பல்வேறு மொழி வழி தேசிய மாநிலங்கள். மத வழியே கிடையாது, ஜாதி வழியே கிடையாது, மொழி வழியே தேசிய இனங்கள். இது தமிழர்கள் தாய் பூமி, தமிழ்நாடு. அது தெலுங்கர்கள் தாய் பூமி ஆந்திரா. அது தெலுங்கானா, அது கேரளா. மொழி வழியே தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதுள்ளது.  மத வழியே கிடையாது. அப்படி மொழி வழியே பிரிக்கப்பட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்திற்கு பிரிக்கப்பட்ட மாநிலம் எத்தனை? ஒன்றும் இல்லை.

சரியா அந்த கணக்கு தெரியல. 24 ஆயிரத்து 714 பேரோ…  இவ்வளவு தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் என்று அவர்களே வெளியிடுகிறார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பற்றி பேசுகிற பிரதமர்,  பாரதிய ஜனதா கட்சி,  புதிதாக கட்டிய பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கல்வெட்டு… இந்தியில் கல்வெட்டு… சமஸ்கிருதத்தில் கல்வெட்டு… ஏன் என் தாய் மொழிக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கல ? என தெரிவித்தார்.