சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அதனால் மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை கூறலாம். மேலும் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.