மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், போலீஸ் ஜீப்பின் கூரையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இளம் ஜோடி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு, ராம்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தன்று, 22 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் பொது இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பார்த்ததும் போலீசார் தடுத்தபோது, இருவரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர், போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்து பிடித்தனர்.
அப்போது, போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்துச் செல்ல முற்பட்ட நிலையில், அந்த இருவரும் வாகனத்தின் கூரையில் ஏறி 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவம் பார்வையிட இருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
17 வயதான அந்த சிறுமி, போலீசாரிடம் “நாங்கள் தவறு செய்யவில்லை; எங்களை கைது செய்ய வேண்டாம்” எனக் கெஞ்சுவதாகவும், அந்த இளைஞரை வாகனத்திலிருந்து இறக்கும்படி முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அந்த இளம் ஜோடியை போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்த சிறுமி ஒரு மைனர் எனத் தெரியவந்தது. அவர்களை கைது செய்த பின்னர், அந்த இளைஞருடன் மைனர் பெண் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீஸ் வாகனத்தின் கூரையில் ஏறி குழப்பத்தை ஏற்படுத்தியதற்கும் கீழ் பிரிவு சட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
प्रशासन की मौजूदगी मे ये क्या ड्रामा चल रहा है.#कोटा pic.twitter.com/ynKkoHNtln
— एक नजर (@1K_Nazar) September 21, 2025
