உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளில் ஒன்றான ‘தி எம்பதி சூட்’, லாஸ் வேகஸில் உள்ள பாம்ஸ் கேசினோ ரிசார்ட்டில் அமைந்துள்ளது. பிரபல கலைஞர் டேமியன் ஹர்ஸ்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த சூட், வெறும் தங்கும் இடம் மட்டுமல்ல, அது ஒரு கலைக்கூடமாகவே காட்சியளிக்கிறது.
மேலும் சுமார் 9,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களைக் கொண்ட இந்த அறையின் உள்ளே நுழைந்தால், கண்ணைக் கவரும் நவீன கலைப்படைப்புகள், விலைமதிப்பற்ற பளிங்கு கற்களால் ஆன தரைத்தளம் மற்றும் லாஸ் வேகஸ் நகரின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கண்ணாடி ஜன்னல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
View this post on Instagram
“>
இங்கு ஒரு பிரத்யேக நீச்சல் குளம், மசாஜ் அறை, உப்பு சிகிச்சை அறை மற்றும் ஒரு பெரிய மதுபான பார் என சொகுசின் உச்சத்தை உணரலாம். இந்த ஹோட்டல் அறையில் ஒரு இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில சமயங்களில் இது 80 லட்சம் வரை கூட செல்லக்கூடும்.
இந்நிலையில் இவ்வளவு அதிக கட்டணத்திற்கு ஈடாக, விருந்தினர்களுக்கு 24 மணிநேரமும் பணிபுரியும் உதவியாளர்கள், சொகுசு கார் வசதி மற்றும் ஹோட்டலில் உள்ள பிரத்யேக வசதிகளைப் பயன்படுத்தும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த அறையின் உள்ளே உள்ள தளபாடங்கள் முதல் அலங்காரப் பொருட்கள் வரை ஒவ்வொன்றும் உலகத்தரம் வாய்ந்தவை. பணக்காரர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் மட்டுமே தங்கும் இந்த இடம், ஆடம்பரத்தின் அடையாளமாகவும் நவீன கலைநயத்தின் உச்சமாகவும் திகழ்கிறது.
